search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரப்ரி தேவி"

    பீகார் முன்னாள் முதல் மந்திரி ரப்ரி தேவியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பாட்னா:

    ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான ரப்ரி தேவி பாடான் நகரில் உள்ள சர்க்குலர் சாலை பகுதியில் ஒரு பங்களா வீட்டில் வசித்து வருகிறார்.

    முன்னாள் முதல் மந்திரி என்ற வகையில் இவரது வீட்டுக்கு 24 மணி நேரமும் ஆயுதமேந்திய வீரர்கள் காவல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அவ்வகையில், நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். படை வீரர் கிரியப்பா கிரசூர்(29) என்பவர் தனது கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்த அந்த வீரரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
    பீகார் மாநில சட்ட மேல்சபை எதிர்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரி ரப்ரி தேவி இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளார். #Biharlegislativecouncil #Rabri #oppositionleader
    பாட்னா:

    பீகார் மாநிலத்தை ஆட்சி செய்த ராஷ்டரிய ஜனதா தளம் ஐக்கிய ஜனதா தளம் கூட்டனியில் இரு கட்சிகளின் தலைவர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் இடையே ஏற்பட்ட மோதலில் கூட்டணி உடைந்தது.

    பின்னர், பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சிய  நிதிஷ் குமார் தக்கவைத்து கொண்டார். இந்நிலையில், 75 உறுப்பினர்களை பீகார் மாநில சட்ட மேல்சபை எதிர்கட்சி தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் என ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான ரப்ரி தேவி முன்னர் கோரிக்கை வைத்திருந்தார்.

    ஆனால், மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு என்னும் பெரும்பான்மை உறுப்பினர்கள் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சிக்கு இல்லாததால் அவரது கோரிக்கை முன்னர் நிராகரிக்கப்பட்டது.

    இதற்கிடையில், மேல்சபைக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ராஷ்டரிய ஜனதா தளம் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஏழிலிருந்து ஒன்பதாக உயர்ந்தது.

    இதைதொடர்ந்து, சட்ட மேல்சபை எதிர்கட்சி தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் என மேல்சபை சபாநாயகருக்கு ரப்ரி தேவி நேற்று மீண்டும் கடிதம் எழுதி இருந்தார்.

    இதையேற்று, பீகார் மாநில சட்ட மேல்சபை எதிர்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரி ரப்ரி தேவி இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான அறிவிப்பை சட்ட மேல்சபை துணை சபாநாயகர் ஹாரூன் ரஷீத் இன்று வெளியிட்டார். #Biharlegislativecouncil #Rabri #oppositionleader  
    ×